21ஆம் நூற்றாண்டில் மனித குலத்திற்கெதிரான மிகப்பெரும் இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவுக்கு வந்துள்ளது,
தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இந்தப் யுத்தம் இடம்பெற்றது.
30 வருடமாக இடம்பெற்று வந்த யுத்தம், முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முடிவுற்றது.
இறுதிப் போரின்போது நாற்பதாயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றது.
எவ்வாறிருப்பினும் இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன.