சென்னை அணியின் தலைவராக டோனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை அணிக்கு ஜடேஜா அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட போதும் ஆனால் அணி எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.
அதுமட்டுமின்றி உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான ஜடேஜாவுக்கு தலைவர் பதவி சென்றதும் அவர் ஃபீல்டிங்கிலும் கோட்டை விடுகிறார் என்ற விமர்சனம் வைக்கப்பட்டது.
இதனால் கப்டன் பதவியிலிருந்து ஜடேஜா விலக வேண்டுமென்றும் ரசிகர்களிடம் குரல் எழுந்த நிலையில் அவர்பதவியிலிருந்து விலகி டோனி மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.