முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று கொழும்புக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்த அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் தாக்குதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்வீட்டர் பதிவிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.