யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்து சம்பவங்களில் பாடசாலை மாணவன் உயிரிழந்ததோடு ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மண்டான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் மோட்டார் வண்டியை ஓட்டிவந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதில் ஒன்றுடன் மோதியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் பாடசாலையில் கவிகற்க்கும் 17 வயதான மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் என்பவரே உயிரிழந்தார் என்றும் அவர் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை படுகாயமடைந்த மற்றொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குஞ்சர்கடை சந்திக்கும் புறாப்பொறுக்கிக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்டர் ரக வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap