எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
பெட்ரோல் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவை அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் வழங்கப்படுகின்றன என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறினார்.
எவ்வாறாயினும் நாட்டின் பல இடங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் தொடர்ந்தும் வரிசையில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.