தான் வகித்துவந்த அனைத்து அமைச்சுப் பதவிகளையும் இராஜினாமா செய்துள்ளதாக பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சரராக அவர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.