விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் திரைப்படம் ‘தளபதி 66’, பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி உருவாக்கும் இந்த படத்திற்கு ‘தளபதி 66’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார், மேலும் இப்படத்தில் கில்லி, போக்கிரி, வில்லு போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து 12 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து பிரகாஷ்ராஜ் நடிக்கவுள்ளார்.

அடுத்ததாக இப்படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம், சங்கீதா, யோகி பாபு மற்றும் ஜெயசுதா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆரம்பகாலங்களில் விஜய் நடித்ததை போன்று இப்படம் அமையும் என்றும், இது முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான கதையம்சம் கொண்ட படம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு படங்களின் படப்பிடிப்பு தளங்களில் நடக்கக்கூடிய சுவாரஸ்யமான சம்பவங்கள் சில வெளியாகி வரும் நிலையில் தற்போது ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான மனோபாலா ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சரத்குமார் மற்றும் இதர நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார், இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படம் குறித்து மனோபாலா தெரிவிக்கையில், நான் ‘தளபதி 66’ படத்தில் நடிக்கவில்லை சரத்குமாரை சாதாரணமாக சந்திக்க மட்டுமே நான் சென்றேன் என்று கூறியுள்ளார்.

விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அடுத்த பொங்கல் தினத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap