தம்மை தரிசிக்க எந்தவொரு அரசியல்வாதியும் அனுமதிப்பதில்லை என மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தீர்மானித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தற்காலிக இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது உள்ளிட்ட ஆறு யோசனைகளை முன்வைத்து கடிதம் அனுப்பப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு சமர்பிக்கப்பட்ட கடிதத்திற்கு இதுவரை எவரும் சாதகமாக பதிலளிக்காத காரணத்தினால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
21ஆவது திருத்தத்திற்கான பிரேரணைகள் அடங்கிய ஆவணத்தை மகாநாயக்கர்களிடம் கையளிக்க கண்டிக்கு சென்ற போது, சஜித் பிரேமதாசவும் மல்வத்தை மகாநாயக்கர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி மல்வத்தை மாநாயக்க தேரரைச் சந்தித்து தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பிலான பிரேரணைகள் அடங்கிய ஆவணமொன்றை முன்வைக்க அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு தற்போதைய நிலவரங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் வரவழைக்க முப்பெரும் பீடாதிபதிகள் தீர்மானித்துள்ளனர்.