மஹிந்த ராஜபக்ஷவை உடன் கைது செய் : ஐக்கிய மக்கள் சக்தி
1 min read
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கேட்டுக்கொண்டுள்ளது.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் முதல் குற்றவாளி அவரே என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகும் வரை எந்தவொரு கலைத்துரையாடலிலும் கலந்துகொள்ளாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.