வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்கு ஜனாதிபதி தலைமையில் உப குழுவை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களை உள்ளடக்கிய உபகுழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இதேவேளை பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் ஜூலை வரை நிதி உதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடையாளம் காணப்பட்ட 3.34 மில்லியன் குடும்பங்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் பங்களிப்புடன் இந்த கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.