தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும்விஜய்க்குகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இவரின் ஒவ்வொரு பட வெளியீட்டையும் ரசிகர்கள் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருப்பார்கள்.  சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் பீஸ்ட். 

இந்த படத்தின் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து படம் வெளியாகும் வரை ரசிகர்கள் பேரார்வத்துடன் இருந்தனர், ஆனால் இப்படம் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியினை அளித்தது. படம் அதிகம் வசூல் செய்தாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‘தளபதி-66’ படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இதில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

முன்னர் லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஏற்கனவே விஜய்யின் ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ‘தளபதி-67’ படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிற நிலையில் இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ‘தளபதி-67’ படத்தில் தெறி, மெர்சல் மற்றும் கத்தி போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த மூன்று படங்களிலும் இவர்களது ஜோடி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் சமந்தாவின் கதீஜா என்கிற கதாபாத்திரம் பலரையும் கவர்ந்து இருந்தது.

தற்போது சமந்தா விஜய் தேவரகொண்டவுடன் இணைந்து ‘குஷி’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.  மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  கமல் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படமான ‘விக்ரம்’ நாளைய தினம்(ஜூன்-3) வெளியாகிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap