எதிர்வரும் 5ஆம் திகதி எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், உலக சந்தையில் எரிவாயு விலை குறைந்துள்ளதாகவும், எனவே இந்த சலுகை நுகர்வோருக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எரிவாயு விலை 50க்கு மேல் குறையும் அதேவேளை எரிவாயுவுக்கான விலை சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் என்றும் கூறினார்.

அந்த சூத்திரத்தின் பிரகாரம் இந்த வாரம் விலை குறைக்கப்படும் எனவும் எவ்வாறாயினும், எதிர்காலத்தில் விலை ஏற்ற இறக்கங்களை கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap