மண்ணெண்ணெய், எரிவாயு மற்றும் எரிபொருளுக்கான வரிசைகள் இல்லாத தேசத்தை உருவாக்குவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு இல்லாத பாதுகாப்பான மற்றும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு உண்ணக்கூடிய வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வதற்கான நாட்டை உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக பணம் அச்சிட அனுமதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் தியாகங்களைச் செய்வதற்கும் சவால்களை எதிர்கொள்ளவும் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்குப் பதிலாக மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வகையில் வரவு செலவுத் திட்ட ம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தற்போது பாரிய இழப்பை சந்தித்து வரும் ஸ்ரீலங்கன் விமான சேவையை தனியார் மயமாக்க முன்மொழிவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு தனிநபரையோ, குடும்பத்தையோ அல்லது ஒரு குழுவையோ பாதுகாப்பது அல்ல, தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதே தனது நோக்கம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.