நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என அரசாங்கம் கூறியுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் தற்போதைய சந்தை விலையை விட எவ்வித சலுகைகளும் யாருக்கும் வழங்கப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனதிற்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு அம்பியூலன்ஸ் சேவையை தவிர வேறு யாருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சலுகை வழங்கப்படாது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். (CBCTAMIL)