15 வருடங்களாக ராஜபக்ஷக்களுடனான உறவினை இன்றுடன் முறித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சி.எல்.எஃப் வளாகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ச்சியான பல தவறுகளை ராஜபக்ஷக்கள் இழைத்து வருவதால், அவர்களுடனான உறவினை இன்றுடன் முறித்துக்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கூட்டத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, செந்தில் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap