முன்னாள் பொலன்னறுவை மாவட்ட ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மறைவையடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஜகத் சமரவிக்ரம நியமிக்கப்பட்டார்.
கடந்த வாரம் தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி ஒன்றின் மூலம் அவரது பெயரை அறிவித்திருந்த நிலையில் அவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்