இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து நேற்று ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.

இந்த அறிக்கைகள் மற்றும் அத்தகைய கருத்துக்கள் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் பொருந்தவில்லை என குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும்.

இதனை இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் நேற்று தெளிவாகத் தெரிவித்தார் என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap