புதிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்றாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கும் ஆதரவளிக்க தயார் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, புதிதாக நியமிக்கப்பட்டவர்களால் பொருளாதாரம் ஸ்திரமடையும் என தனது தரப்பு நம்பவில்லை என்றார்.
புதிய பிரதமரை தாக்குவதற்கு விருப்பவில்லை எனவும், எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் வீரவன்ச தெரிவித்தார்.
எவ்வாறாயினும், உள்நாட்டு சொத்துக்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.