அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகி தம்மை சுயாதீனமாக அறிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்தை சுதந்திரக் கட்சியின் தலைமையிலான குழுவினர் எடுத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இன்று அறிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த வாரம் சபாநாயகரிடம் ஐக்கிய மக்கள் சக்தியினால் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளதால் அரசாங்கம் 109 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே காணப்படுகின்றது.

இதேவேளை குறித்த 109 பேரில் பொதுஜன பெரமுனவின் மேலும் 10 உறுப்பினர்களும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap