கோதுமை மாவின் விலை அதிகரிப்பை தொடர்ந்து பேக்கரி உணவு பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மீண்டும் 35 ரூபாயினால் அதிகரித்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

கோதுமை மா ஏற்றுமதியை நிறுத்த இந்தியா தீர்மானித்துள்ளமை காரணமாக உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே இலங்கையில் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் பிரீமா நிறுவனம் மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயினாலும், செரண்டிப் நிறுவனம் 35 ரூபாயினாலும் அதிகரித்தது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap