ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூவரடங்கிய குழுவொன்றை நியமித்தது.
அக்குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைக்களுக்கமைய, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.