உறவினருடன் செல்பி எடுத்த மனைவி மீது கோபம் கொண்டு கணவன் செய்த விபரீத செயலால் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை டிவிஎஸ் நகரைச் சேர்ந்த எட்வர்ட் ஜான் – கிரேஸ் பியூலா தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 6ஆம் திகதி தனது சகோதரியின் திருமணத்திற்கு கிரேஸ் பியூலா சென்ற போது அங்கு உறவினர் ஒருவருடன் செல்பி எடுத்ததை பார்த்த எட்வர்ட்ஜான், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கிரேஸ் பியூலா தனது மகளுடன் தங்கை வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார்.

அப்போது குடிபோதையில் இந்த எட்வர்ட் ஜான், மனைவியிடம் தாமதமாக வந்தது ஏன் என்று கேட்டு தகராறு செய்ததோடு உறவினருடன் செல்பி எடுத்தது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென எட்வர்ட் ஜான் கத்தியை எடுத்து கிரேஸ் பியூலா கழுத்தில் குத்தி உள்ளார். இதனால் படுகாயமடைந்த கிரேஸ் பியூலாவை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து கிரேஸ் பியூலா மகள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் எட்வர்ட் ஜான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap