அன்றாடம் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் சில நம்மை அவ்வப்போது சிக்கலில் ஆழ்த்தக்கூடும். குறிப்பாக, ஆண்களின் சில கெட்ட பழக்கங்கள் அவர்களின் விந்தணு எண்ணிக்கையில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

இதில் அதிகப்படியான மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் சில தவறான தினசரி பழக்கங்கள் ஆகியவை அடங்கும்.

எனினும், ஆண்கள் இதற்காக கவலைப்படத் தேவையில்லை. இந்த பழக்கங்களை பற்றி தெரிந்துகொண்டு அவற்றை சரி செய்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. ஆண்கள் கண்டிப்பாக கைவிட வேண்டிய சில பழக்கவழக்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அதிக மன அழுத்தம் : ஆண்களின் மன அழுத்தம் காரணமாக விந்தணு எண்ணிக்கையும் குறைவாகலாம். ஏனெனில் கவலை மற்றும் மன அழுத்தம் காரணமாக ஆண்களின் விந்தணுவின் தரம் குறைகிறது.

ஆகையால், மகிழ்ச்சியாக இருந்தால், மன அழுத்தம் ஏற்படாமல் அதன் காரணமாக விந்தணு எண்ணிக்கையும் குறையாமல் இருக்கும்.

உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது : ஆண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், உடல் பருமன் பிரச்சனையை சந்திக்க நேரிடும். உடல் பருமன் காரணமாக, உங்கள் விந்தணுவின் இயக்கம் குறைகிறது.

இது உங்கள் பாலியல் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கிறது. ஆகையால், இன்று முதல் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

இதன் காரணமாக உங்கள் வளர்சிதை மாற்றம் குறைந்து உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆகையால், ஆண்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குடிப்பழக்கம்: போதைப்பொருள், மது மற்றும் புகையிலை ஆகியவற்றின் நீண்டகால பயன்பாடு ஆண்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.

உங்களின் இந்த பழக்கவழக்கங்களால் உங்களுக்கு கடுமையான நோய்களும் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் அடிக்கடி மது அல்லது புகையிலையை உட்கொள்ளும் பழக்கம் உள்ளவராக இருந்தால், இன்றே அந்த பழகத்தை விட்டுவிடுங்கள்.

இரவில் தாமதமாக தூங்கும் பழக்கம்: இரவில் தாமதமாக தூங்குவதால், உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது உங்கள் விந்தணு எண்ணிக்கையை குறைக்கும்.

இதனுடன், இரவில் அடிக்கடி எழுந்திருப்பதால், இது உங்கள் மூளையிலும் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. எது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதனால் உங்கள் விந்தணு எண்ணிக்கையும் பாதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap