Harsha and Eran have informed their intent to support the government in the event a decision is reached to dissolve Parliament

நாடாளுமன்றத்தை கலைத்தால் அதற்கு ஆதரவு வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று சபையில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்திருந்தார்.

எனவே தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அரசியலமைப்பின் படி பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என தெரிவித்த ரோஹித அபேகுணவர்தன, நாடாளுமன்றத்தை கலைக்கும் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை ரோஹித அபேகுணவர்தனவின் நாடாளுமன்ற கலைப்பு யோசனைக்கு எரான் விக்ரமரத்னவும் இணக்கம் தெரிவித்ததுடன் இருகைகளையும் உயர்த்தி ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap