ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பங்களிப்பை வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இன்று மாலை யக்கலவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நிலையில் அங்கு கருத்து தெரிவித்த அவர், மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையுடன் தாங்கள் இணையப்போவதில்லை என்றும் கூறினார்.
மேலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் போராடும் இளைஞர்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் ஊழல்வாதிகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் கைகோர்க்காது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.