முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த படையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இராணுவத்தினருக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் இருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
இராணுவ சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
சோதனைச் சாவடியில் உள்ள படையினர் தகவல் வழங்கியதை அடுத்து அடங்கு விசாரணை நடத்த சென்ற படையினரின் வாகனம் மீது கற்கள் மற்றும் போத்தல்களை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நிலைமையைக் கட்டுப்படுத்த படையினர் வானத்தை நோக்கிச் சுட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
இருப்பினும் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியோடு அப்பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை நேற்று இரவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.