சிங்கப்பூர் செல்லவுள்ளார் ஜனாதிபதி கோட்டா? வெளியான முக்கிய தகவல்
1 min read
மாலைதீவில் இருந்து இன்று மாலை கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூர் செல்லவுள்ளார் மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தற்போது மாலைதீவில் உள்ள Waldorf Astoria Ithaafushi Resort இல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மாலேயில் உள்ள ஜனாதிபதி ஜெட்டியில் இன்று மாலை 3:30 மணிக்கு மாலத்தீவு மக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.