நாட்டில் நிலவும் நிலைமையை அரசியலமைப்பு ரீதியாக தீர்க்க முடியும் என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகவே நாட்டில் அமைதியைப் பேணுவதற்கு முப்படையினருக்கும் பொலிஸாருக்கும் ஆதரவளிக்குமாறு சவேந்திர சில்வா பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையிலும், அரசியலமைப்பு ஊடாகவும் தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த தருணத்தை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் அமைதியைப் பாதுகாக்க தமக்கு ஆதரவை வழங்க வேண்டும் என சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap