இன்று வியாழக்கிழமை முதல் எரிவாயு விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளாந்தம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 3800 தொன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டுக்கு வந்துள்ளதுடன், பணம் செலுத்தப்பட்ட பின்னர் தரையிறங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாட்டின் பல பகுதிகளிலிலும் வாடிக்கையாளர்கள் எரிவாயு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரிசையில் நின்று கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap