எரிவாயு விநியோகத்தை மீண்டும் ஆரம்பிக்க இரண்டு நாட்கள் ஆகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் நாடளாவிய றீட்ர்ஹியில் இன்று விநியோகம் இடம்பெறவில்லை.

இந்நிலைமையினால் எரிவாயு உற்பத்தி தாமதமடையும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு எரிவாயுவிற்காக வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

2,800 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்டுவந்த கப்பல் தொடர்ந்தும் நங்கூரமிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே பவுசர்கள் மூலம் முத்துராஜவெல டெர்மினலுக்கு எரிவாயுவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

பவுசர்கள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 500 மெற்றிக் தொன்களை கொண்டு வர முடியும் எனவும் இதனால் நாளொன்றுக்கு 80,000 சிலிண்டர்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனவும் லிட்ரோ நிறுவனம் கூறியுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap