தற்போது, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றருக்கு 84.38 ரூபாய், 95 ஒக்டேன் 71.19 ரூபாய், டீசல் லீற்றருக்கு 131.55 ரூபாய், சுப்பர் டீசல் லீற்றருக்கு 136.31 ரூபாய் நட்டத்தை அரசாங்கம் சந்தித்துள்ளது.

அத்தோடு மண்ணெண்ணெய் லீற்றருக்கு 294.50 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நாட்டு மக்களுக்கான உரையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மின்சார சபை ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 17 ரூபாயை அறவிட்டாலும் உற்பத்தி செலவு சுமார் 48 ருபாய் வரை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஒரு யூனிட்டுக்கு 30 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap