எரிபொருள் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆகவே எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மே 24 அன்று அதிகாலை 3 மணி முதல் அதிகரிக்கவுள்ளது.
இதற்கமைய ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாய் என கூறப்படுகின்றது.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாய் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 400 ரூபாயாகவும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாயாகவும் அதிகரிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.