எதிர்வரும் 25ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் வாரத்தில் 03 நாட்கள் பாடசாலைகள் நடைபெறும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடு அல்லது ஒன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கைகளை மோற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap