முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 14 பேருக்கும் பயணத் தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (12) உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை (9) கோட்டாகோகம மற்றும் மைனகோகம அமைதிப் போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர்கள் வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுகா பெரேரா, சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட பலருக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.