Fort magistrate issues a court order for the removal of protestors & all their structures near Temple Trees

அலரிமாளிகைக்கு முன்பாக மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களையும் அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டங்கள் தொடரலாம் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை இடம்பெற்றபோதே கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அலரிமாளிகைக்கு அருகாமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு அமுல்படுத்தப்படாமை தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap