வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க வசந்த கரன்னகொட, ரொஷான் குணதிலக்க மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 மற்றும் மே 09 ஆம் திகதிகளில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த வசந்த கரன்னகொட தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.

இவர்கள் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற பதற்ற நிலையின் போது முப்படையினரால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பாக ஆராயர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) முதல் சாட்சிய சேகரிப்பு நடவடிக்கை தொடங்கும் என குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் 14 ஆவது சந்தேக நபர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட என்பது குறிப்பிடத்தக்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap