2022 ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்த பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி வழங்குவதை குறைக்க அல்லது முழுமையாக நிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி திட்டங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் முன்மொழிந்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி 2021 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்திற்குப் பதிலாக குறை நிரப்பு பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அரசுக்கு சொந்தமான வணிக நிறுவனங்கள், அமைச்சுக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து, அவற்றில் வீண் முறைகேடுகள் அல்லது தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap