சிறுமி ஆயிஷாவை படுகொலை செய்த கொலையாளி மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வெளியான மற்றுமொரு திடுக்தகவல்
1 min read
சிறுமி ஆயிஷா என்ற சிறுமியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், இதற்கு முன்னரும் அப்பகுதியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளமை இன்று (01) தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது என்றும் குறித்த பெண் தங்கியிருந்த வீட்டிற்குள் இரகசியமாக பிரவேசித்த சந்தேக நபர், துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவிக்கையில், “நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தேன். என் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கும்போது என் வாயை அடைக முயன்றான்.
நான் விழித்தேன். என்னை கயிற்றால் கட்ட முயன்றனர். நான் கத்தினேன். அவன் உடனடியாக ஓடிவிட்டார். ” என கூறினார்.
பொலிஸில் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
அப்போது பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ஆயிஷா பாத்திமாவுக்கு இப்படியொரு கதி வந்திருக்காது என்றும் அந்த பெண் மேலும் தெரிவிக்கிறார்.