CBC Tamil News – Latest Sril Lanka, World, Entertainment and Business News

Ceylon's home for News, Entertainment, Sports, Music and much more. Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

சூரிய பெயர்ச்சி: தலைவிதி மாறப் போகும் ராசிக்காரர்கள் நீங்களா?இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்…. !

1 min read

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். அதன்படி, சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு வந்தார். பொதுவாக சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் ஜோதிடத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் மே 15 ஆம் தேதி அதாவது நாளை சூரியன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.

இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது. ரிஷப ராசியில் சூரியன் நுழைவது விருஷப சங்கராந்தி எனப்படும்.

இதற்குப் பிறகு, அடுத்த 30 நாட்களுக்கு சூரியன் ரிஷப ராசியில் இருப்பார். எனவே இந்த சூரிய பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம்: சூரியன் ரிஷப ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். இந்த சூரிய பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உத்தியோகம் செய்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் கௌரவம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க இது சாதகமாக நேரமாகும். அதே சமயம் வியாபாரிகளின் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். நிதி ரீதியாக முன்னேற்றம் அடையலாம். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரம். வெற்றி பெருகும்.

சிம்மம்: ரிஷப ராசியில் சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தந்தையிடமிருந்து சிறப்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். அவர்கள் வாழ்வில் நல்ல நாட்கள் வரும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை, பண விஷயங்களில் முன்பை விட நிலைமைகள் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தடைபட்ட பணிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.

Leave a Reply

Copy link
Powered by Social Snap