சின்னத்திரை நடிகையான விஜே சித்ராவின் மரணம் நிகழ்ந்து சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

சித்ரா தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் சித்ராவின் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்புகூட கூறியிருந்தனர்.

சித்ராவின் மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கேரளாவைச் சேர்ந்த சஹானா எனும் 20 வயதுடைய சீரியல் நடிகை, சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில் அவரது கணவரிடம் விசாரணை நடந்துவருகிறது.

சஹானாவின் மரணம் நிகழ்ந்த சுவடு மறைவதற்குள்ளாக மற்றொரு சீரியல் நடிகையான பல்லவி தேய் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

பல்வேறு சீரியல்களில் நடித்துப் பிரபலமானவரான பல்லவி, சாக்னிக் சக்ரபோர்த்தி எனும் நபருடன் ‘லிவிங் டுகெதர்’ முறையில் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்துவந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap