விமலின் மனைவிக்கு பிணை…. வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு
1 min read
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஷி வீரவன்சவின் பிணை விண்ணப்பத்தை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம் 50,000 ரூபாய் ரொக்க பிணையில் தலா 5 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல உத்தரவிட்டது.
போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.