க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும்போது பரீட்சார்த்திகள் முக்கவசம் அணிய வேண்டிய அவசியம் கிடையாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இருப்பினும் பரீட்சை நிலையத்திற்கு வரும்போதும், புறப்படும் போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என குறிப்பிட்டார்.

இதேவேளை மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் உடனடியாக அதிபர் ஊடாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

எனேவ தொற்று உறுதியான மாணவர்கள் எவ்வாறு பரீட்சை எழுத வேண்டும் என்ற விதிமுறைகள் அந்தந்த நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap