ராஜபக்சவின் கட்டளையுடன் ரணில் அல்ல புத்தரால் கூட நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர்கள் இருக்கும்வரை நாடு இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் சுனாமியை விட ராஜபக்ச அரசாங்கம் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த உறுப்பினர்களை இணைத்து நல்லதொரு சர்வகட்சி அரசாங்கம் அமைத்தால் மக்கள் இன்று வரிசையில் நிற்க மாட்டார்கள் என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.