இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 ஏழைக் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்காக 200,000 யூரோ மனிதாபிமான நிதியுதவியாக வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் இந்த நெருக்கடியால் பதுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
மக்களுக்கு இந்த நிவாரண உதவி முக்கியம் என்றும் சீரழிந்து வரும் பொருளாதாரம் மக்களின் வாழ்வில் தொடர்ந்தும் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிப்பதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிதியானது சர்வதேச செஞ்சிலுவை மற்றும் IFRC, DREF மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.