தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்ட துமிந்த சில்வா தொடர்ந்தும் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் அவர் வெளிநாட்டு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம் அவரை கைது செய்யுமாறும் உயர் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் தொடர்ந்தும் துமிந்த சில்வாவை தேடிவந்த சி.ஐ.டி. இறுதியாக வைத்தியசாலையில் வைத்து அவரை நேற்று கைது செய்திருந்தது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap