முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் நேற்று (31) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அத்தோடு துமிந்த சில்வாவை கைது செய்வதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை சி.ஐ.டி.க்கு வழங்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரேமச்சந்திர கொலை வழக்கில் சில்வா மற்றும் பலர் குற்றவாளிகள் என கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 செப்டெம்பர் மாதம் தீர்ப்பளித்தபோது அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனை அடுத்து போயா தினத்தை முன்னிட்டு 2021 ஜூன் 24 அன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap