பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வருவதற்கும் புதிய அரசாங்கம் அவசியம் என முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்ததாக முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
மேலும் தாமதமின்றி புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த தனது நிலைப்பாட்டை இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.