திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் சேவைகள் இன்று வழமைபோல இடம்பெறும் என்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற சேவைகளுக்காக இன்று (4) தனது தலைமை அலுவலகத்தை அணுகுவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டது.

கணினி அமைப்பு பழுதடைந்துள்ள நிலையில் ஒரு நாள் சேவையில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்பதனாலேயே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தது.

இந்நிலையில் குறித்த சேவைகள் இன்று வழமைபோன்று இடம்பெறும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap