இன்று வானில் நடக்கவுள்ள அதிசயம் : வெற்றுக் கண்ணால் பார்க்க முடியும் !
1 min read
செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றே ஒன்று சந்திப்பது போன்ற காட்சி வானில் இன்று ஞாயிற்றுக்கிழமை தோன்றவுள்ளது.
இதனை மக்கள் வெற்று கண்ணில் பார்க்க முடியும் என யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.
செவ்வாய் கிரகத்தை தெளிவாகக் கண்டறிய தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம் என நாசா வானியலாளர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வியாழன் கிரகத்தை அடையாளம் காண்பதில் பார்வையாளர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்றும் நாசா வானியலாளர் அல்போன்ஸ் ஸ்டெர்லிங் கூறியுள்ளார்.
இரண்டு கிரகங்களும் கிழக்கு-தென்கிழக்கு வானத்தில் அடிவானத்திலிருந்து 20 டிகிரி அல்லது அதற்கு மேல், மீனம் விண்மீன் கூட்டத்திற்கு எதிராக, உள்ளூர் சூரிய உதயத்திற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன் தோன்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது.