இந்திய கடன் வசதியின் கீழ் நேற்று (16) பிற்பகல் இலங்கைக்கு வந்த டீசலின் தரம் குறித்து தற்போது மதிப்பிடப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், எரிபொருள் இருப்புக்களை வந்தவுடன் சோதிப்பது வழக்கமான நெறிமுறை என கூறினார்.

முறையான திட்டத்தின்படி டீசல் விநியோகிக்கப்படும் என நம்புவதாகவும், ஜூன் 21ஆம் வரை கையிருப்பு போதுமானதாக இருக்கும் என நம்புவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதேவேளை நேற்று பெறப்பட்ட எரிபொருள் இலங்கை பெறும் கடைசி எரிபொருள் இறக்குமதி என சில தரப்பினர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்திய கடன் வசதியின் கீழ் நாட்டுக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் இதற்கு குறிப்பிட்ட தொகை இந்திய கடன் வசதி மூலமும், இரண்டு வாரங்களுக்கு முன்பு 25 மில்லியன் டொலர்கள் கருவூலத்தால் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீண்ட கால எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உபகுழு, டீசல் மற்றும் பெட்ரோலை இறக்குமதி செய்ய இரண்டு புதிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap